மொன்ரியல்
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
English    Français    514-272-2956              

எங்கள் கோவில் பற்றிமொன்ரியல் துர்க்கை அம்மன் கோவில் 1992 ஆம் ஆண்டு முதலில் ஹட்சின்சன் தெருவில் ஒரு தொழிற்சாலை கட்டிடத்தில் பார்க் மெட்ரோவுக்கு எதிர்மாறாக தொடங்கப்பட்டது.

பின்பு 1995 ஆம் ஆண்டு புதிய கோயில் ஜீன்-தலோன் தெருவில் கட்டப்பட்டு, செப்டம்பர் 1995 இல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

1995 ம் ஆண்டு முதல், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாட்டு இந்துக்களின் வருகை மூலம் கோவிலில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டது.

நவம்பர் 2000 ஆம் ஆண்டில், அருகில் உள்ள 259 Jean-Talon West கட்டிடம் வாங்கப் பட்டு அது பல்வேறு விழாக்களுக்கான ஒரு மண்டபமாகப் பாவிக்கப் பட்டது.

2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், வாகன நிறுத்துமிடம் திருத்தப் பட்டு, பக்தர்களுக்கு வசதியான இடமாக​ அமைக்கப்பட்டது.

பக்தர்கள் எல்லோரின் உதவியினால் கோவில் ஒவ்வொரு விதத்திலும் வளர்ச்சியையே காண்பிக்கிறதுMontreal Durkai Temple © 2021 All Rights Reserved - Contact Webmaster