எதிர் வரும் 13-04-2020 திங்கட் கிழமை
தமிழ்-சார்வரி புத்தாண்டினை முன்னிட்டு
அன்று காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்று அதன் பின்
அர்ச்சனைகளும் இடம் பெறும் என்பதனை அறியத் தருகிறோம்.
தற்போது அம்பாளை நேரடியாக தரிசிக்க முடியாத
சூழ்நிலை காரணத்தால், அடியார்கள் நிர்வாக உறுப்பினரை தொடர்பு கொண்டு
தமது பெயர் நட்சத்திர விபரங்களை கொடுத்தால், அவர்களுக்கான
அர்ச்சனைகள்
வருடப் பிறப்பின் போது நடை பெறும் என்பதை அறுயத் தருகின்றோம்.
அதே வேளையில், நீங்கள் ஆலய தொலைபேசிக்கு (514-272-2956)
சனிக் கிழமை காலை 10 இல் இருந்து 12 வரையிலும்
தொடர்பு கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகிறோம்.
மேலும், இம்முறை மருத்து நீர் கொடுக்க முடியாத சூழ்நிலைகள்
இருப்பதால் தோஷ நட்சத்திரங்களான அச்சுவினி, கார்த்திகை, ரோகிணி,
மிருகசீரிடம், மகம், மூலம், பூராடம், உத்தராடம் போன்ற நட்சத்திரத்தில் உள்ள
அடியார்கள் பாலில் சிறிதளவு மஞ்சள் கலந்து தலையில் வைத்து நீராடி தமது தோஷ
நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதனையும் அறியத் தருகின்றோம்.
கை விசேட புண்ணிய காலம்
காலை 6:43 மணி முதல் பிற்பகல் 1:56 வரை